விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்த ஸ்ருதி!

விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்த ஸ்ருதி!

செய்திகள் 16-Jul-2014 10:38 AM IST VRC கருத்துக்கள்

‘கத்தி’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள் என்று பேசப்பட்டு வருகிறது. அதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டது. இப்போது இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பது உறுதியாகி விட்டது. இதை அவரே ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த ட்விட்டர் மெசேஜில் ‘‘சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறேன். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. சரித்திர பின்னணியை கொண்ட எக்சலன்ட் ஸ்டோரி. இதில் அசல் ஒரு தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் துவங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;