வருகிறது இன்னொரு ‘யாமிருக்க பயமே’

வருகிறது இன்னொரு ‘யாமிருக்க பயமே’

செய்திகள் 16-Jul-2014 10:34 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு படம் ஹிட்டானால் போதும்... அதேபோல் ஏகப்பட்ட படங்கள் வந்து குவிந்துவிடும் கோடம்பாக்கத்தில். அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவை ‘பேய்’ பிடித்து ஆட்டுகிறது. தற்போது மட்டும் இங்கு 10த்திற்கும் மேற்பட்ட ‘ஹாரர்’ படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் ஏற்கெனவே உருவாகியிருக்கும் ஏழெட்டு திகில் படங்களும் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) ‘இருக்கு ஆனா இல்ல’ என்ற திகில் படம் ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘யாமிருக்க படமே’ ஹாரர் படத்திற்கு முதலில் ‘இல்ல ஆனா இருக்கு’ என்ற பெயரையே வைத்திருந்தனர். இந்த இரண்டு படங்களின் பெயர்களும் கிட்டத்தட்ட ஒரேபோல் இருந்ததால் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தங்கள் படத்திற்கு ‘யாமிருக்க பயமே’ என்று பெயரை மாற்றி வெளியிட்டனர்.

வரம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கே.எம்.சரவணன் இயக்கியிருக்கும் ‘இருக்கு ஆனா இல்ல’ படம் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடும் ‘சதுரங்க வேட்டை’ ஆகியவற்றுடன் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;