‘‘விஜய் சூப்பர்ஸ்டாரா?’’ - அதிரும் ‘கத்தி’ வில்லன்

‘‘விஜய் சூப்பர்ஸ்டாரா?’’ - அதிரும் ‘கத்தி’ வில்லன்

செய்திகள் 16-Jul-2014 10:09 AM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி’ படத்தின் வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். ‘நியூயார்க்’, ‘ஜெயில்’, ‘டேவிட்’ உட்பட பல பாலிவுட் படங்களில் தன்னுடைய வித்தியாசமான ஆக்ஷன் நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவர், தமிழில் நடிப்பது இதுவே முதல்முறை. விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி நீல் நிதின் முகேஷ் கூறும்போது, ‘‘விஜய் ஒரு சூப்பர்ஸ்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர், ‘கத்தி’ படப்பிடிப்பின்போது இவ்வளவு சிம்பிளாக இருந்தால் யார்தான் அவரை சூப்பர்ஸ்டார் என நம்புவார்கள். உண்மையிலேயே அவரின் எளிமை¬யும், அமைதியான குணமும் என்னை வியக்க வைக்கிறது!’’ என புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ‘கத்தி’ வில்லன்.

‘ஜானி கத்தார்’ என்ற பாலிவுட் படத்தில் நீல் நிதினின் நடிப்பைப் பார்த்துதான் கத்தியில் அவரை நடிக்க வைத்தாராம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்த நீல் நிதின் முகேஷ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான படத்தின் பெயர் என்ன தெரியுமா? ..... ‘விஜய்’!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;