தமிழில் ரீ-என்ட்ரியாகும் அமலா!

தமிழில் ரீ-என்ட்ரியாகும் அமலா!

செய்திகள் 15-Jul-2014 2:32 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு உட்பட தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அமலா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான அமலா நீண்ட ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். ஆனால் சினிமாவில் அல்ல, டிவிக்காக எடுக்கப்படும் ‘உயிர்மெய்’ என்ற தொடரில்! இந்த தொடர் 12 டாக்டர்கள் பற்றிய ஒரு வித்தியாசமான கதையாம்! அந்த 12 மருத்துவர்களில் ஒருவராக நடிக்கிறார் அமலா! இந்தத் தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு நடிக்க வந்த அமலா இத்தொடரில் நடிப்பது குறித்து குறிப்பிடும்போது, ‘‘உயிர்மெய்’ தொடரின் கதையை கேட்டபோது என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் தொடர் இது. தமிழ் படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வருகிறது. ஆனால் அதற்கு நிறைய நாட்கள் தேவைப்படும் என்பதால் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னைக்கு வந்து இந்த தொடரில் நடித்தபோது பசுமையான பழைய நினைவுகள் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. நான் ஹைதராபாத்தில் வசித்து வந்தாலும் என்னால் சென்னையை ஒருபோதும் மறக்க முடியாது’’ என்று கூறியிருக்கிறார். நடிகை அமலா சில சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;