‘மலையாளத்தில் தான் கலச்சாரம் இருக்கிறது!’ - டி.ராஜேந்தர்

‘மலையாளத்தில் தான் கலச்சாரம் இருக்கிறது!’ - டி.ராஜேந்தர்

செய்திகள் 15-Jul-2014 11:36 AM IST inian கருத்துக்கள்

'ஒருதலை ராகம்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான சங்கர், தமிழ், மலையாளம் என்று 120 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக தமிழில் இயக்கியுள்ள படம் 'மணல் நகரம்'. ஏற்கெனவே மலையாளத்தில் இவர் படம் இயக்கியுள்ளார். 'மணல் நகரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. 'மணல் நகரம்' ஆடியோவை டி.ராஜேந்தர் வெளியிட, ‘ ஒருதலை ராகம்’ படத்தின் நாயகி ரூபா பெற்றுக் கொண்டார். 'ஒருதலை ராகம்' படக்குழுவினரை விழாவுக்கு வரச்செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார். 'ஒரு தலை ராகம்' சங்கர்.

அதன்படி இயக்குநர் டி.ராஜேந்தர், நாயகி ரூபா, நடிகர்கள் தியாகு, தும்பு கைலாஷ், ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன், பி.ஆர்.ஓ.டைமண்ட் பாபு என ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினர் விழாவில் கலந்து கொண்டு, அந்தப் படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது டி.ராஜேந்தர் பேசும்போது, ‘‘நான் என்றும் பழையதை மறக்க மாட்டேன். நான் 'ஒருதலை ராகம்' எடுத்த மாயவரம் ஏவிசி கல்லூரியை பார்த்தாலே இன்றும் விழுந்து கும்பிடுவேன். 34 ஆண்டுகளாக இது வரை அங்குபோனது இல்லை. இந்த ஆண்டு போகவுள்ளேன். இன்று எல்லாம் மாறி விட்டது. கேட்டால் ட்ரென்ட் என்கிறான். அன்று நாகரிகமாக காதல் இருந்தது. இன்று மாறிவிட்டது. நூன் ஷோவில் பிக்-அப், மேட்னியில் பேக்-அப் என்று மாறிவிட்டது. அன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள். இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். அன்று குத்துப்பாட்டு வைத்தார்கள். இன்று வெத்துப்பாட்டு வைக்கிறார்கள்.

இன்று தமிழ் சினிமாவில் அம்மா, ஆத்தா, தங்கை சென்டிமென்டை மதிப்பதில்லை .அப்படி வைத்தால் சீரியல் என்கிறான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இன்றும் அம்மா, ஆத்தா, தங்கை சென்டிமென்டை மதிக்கிறான். இன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது, கேட்டால் ட்ரென்ட் என்கிறான். அன்று 'ராகம் தேடும் பல்லவி'யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக காண்பித்தேன். இன்று அது பலித்து விட்டது. எனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் கலாச்சாரம் இருக்கிறது. அங்குதான் 'திருசியம்' போன்ற குடும்ப கதை படங்கள் ஓடுகிறது. மலையாளத்தில்தான் மம்முட்டி, மோகன்லால், திலீப் என எல்லாரும் வேட்டி கட்டி நடிக்கிறார்கள். இங்கு வேட்டி கட்டி நடிக்கிறார்களா? எல்லாரும் ஜீன்ஸ் போட்டு நடிக்கிறார்கள்’’ என்றவர் படக் குழுவினரை வாழ்த்தினார். படக்குழுவினருக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;