பொங்கலுக்கு விஷாலின் ‘ஆம்பளை’

பொங்கலுக்கு விஷாலின் ‘ஆம்பளை’

செய்திகள் 15-Jul-2014 10:59 AM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படம் முடிந்ததும் அடுத்து சுந்தர்.சி.இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இந்தப் படத்திற்கு ‘ஆம்பளை’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.ஆனால் இந்த தலைப்பு மாறுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறார் விஷால். 'பூஜை' படத்தின் படப்பிடிப்பு முக்கால் பங்கும் முடிந்துவிட்டதாம். இன்னும் சில காட்சிகள் மற்றும் மூன்று பாடல்களை படம் பிடித்தால் ‘பூஜை’யின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் ‘மதகஜராஜா’ படத்தில் நடித்துள்ளார் விஷால்! இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் இரண்டாவது படமான ‘ஆம்பளை’ படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார் விஷால். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;