ஆகஸ்ட் 1-ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

ஆகஸ்ட் 1-ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

செய்திகள் 15-Jul-2014 10:36 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆர். பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் புதுமுகங்கள் நடித்திருக்க, ஆர்யா, அமலாபால், விஷால், பிரகாஷ் ராஜ், விஜய்சேதுபதி, டாப்சி உட்பட தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர், நடிகையரும் இதில் நடித்துள்ளனர். சமீபத்தில் சென்சாருக்கு சென்ற இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு 'U' சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். கோலிவுட்டில் மாறுபட்ட பல வெற்றிப் படங்களை தந்த பார்த்திபன் இயக்கி, தயாரித்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது பரவலான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ‘இந்திய சினிமா 100 ஆண்டை கடந்துள்ள நிலையில், ‘கதை இல்லாத சினிமா’ என்ற அடைமொழியோடு உருவாகியிருக்கும் இப்படத்தை ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் பார்த்திபன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;