ஆகஸ்ட் 15-ல் சூர்யாவின் டபுள் தமாக்கா!

ஆகஸ்ட் 15-ல் சூர்யாவின் டபுள் தமாக்கா!

செய்திகள் 15-Jul-2014 10:08 AM IST VRC கருத்துக்கள்

சூர்யாவுக்கு ஆந்திர மாநிலத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்! இதனால் அவர் நடிக்கும் படங்களுக்கு அங்கும் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. சூர்யா நடித்து, தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு வெளியான பல படங்கள் ஏற்கெனவே நல்ல வசூலை தந்துள்ள நிலையில் சூர்யா நடித்திருக்கும் ‘அஞ்சான்’ படமும் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தமிழில் ‘அஞ்சான்’ வெளியாகும் அதே நாளிலேயே (ஆக்ஸ்ட்-15) சிக்கந்தர் படமும் வெளியாகிறது. ‘அஞ்சான்’ தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதைப் போலவே தெலுங்கு ரசிகர்களிடமும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ‘சிக்கந்தர்’ என்ற பெயருக்கு ஆங்கிலத்தில் ‘வின்னர்’ என்று அர்த்தமாம்! லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சானி’ல் சூர்யாவுடன் சமந்தா ஜோடியாக நடித்திருக்க, முக்கிய கேரக்டரில் வித்யுத் ஜமாலும் நடித்துள்ளார். இவர்கள் அத்தனை பேரும் தெலுங்கிலும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;