‘அஞ்சான்’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

‘அஞ்சான்’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

செய்திகள் 15-Jul-2014 10:01 AM IST Chandru கருத்துக்கள்

ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் 23 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதித்துக் கொண்டிருக்கிறது ‘அஞ்சான்’. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ‘அஞ்சான்’ ஆல்பத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. மொத்தம் 5 பாடல்களைக் கொண்டுள்ள இந்த ஆல்பத்தின் முதல் பாடலான ‘பேங்... பேங்... பேங்...’கை கே.ஜி.ரஞ்சித் பாட, வரிகளை உருவாக்கியுள்ளார் மதன் கார்க்கி. ‘ஒரு கண் ஜாடை...’ எனும் டூயட் பாடலை பென்னி தயாளும், ஸ்வேதா பண்டிட்டும் இணைந்து பாடியுள்ளனர். வரிகளுக்கு சொந்தக்காரர் விவேகா.

ஆல்பத்தின் மூன்றாவது பாடலில் சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கிறது சர்ப்ரைஸ், ஆம்.... நா.முத்துக்குமார் எழுதியுள்ள ‘ஏக் தோ தீன் சார்...’ பாடலைப் பாடியிருப்பது சாட்சாத் உங்கள் சூர்யாவேதான். அவருடன் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார் நடிகை ஆன்ட்ரியா. தனது ஆல்பத்தில் வழக்கமாக ஒரு பாடலாவது பாடிவிடும் யுவன் ஷங்கர் ராஜா ‘அஞ்சானி’ல் தனக்காக தேர்ந்தெடுத்திருப்பது 4வதாக இடம்பெற்றிருக்கும் ‘காதல் ஆசை...’ பாடலை! கபிலன் எழுதியிருக்கும் இப்பாடலை யுவனுடன் இணைந்து பாடியிருக்கிறார் சூரஜ் சந்தோஷ். விவேகா எழுதியிருக்கும் கடைசிப் பாடலான ‘சிரிப்பு என்...’ பாடலை ஸோலோவாக பாடியிருக்கிறார் எம்.எம்.மானஸி.

‘நச்’சென 5 பாடல்களோடு வெளிவரவிருக்கிறது ‘அஞ்சான்’ ஆல்பம். யுவனின் இசையில் இந்த வருடத்தின் ‘ப்ளாக் பஸ்டர்’ ஹிட்டாக மாறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;