லிங்குசாமிக்கு ‘எனர்ஜி’ கொடுத்த சதுரங்க வேட்டை!

லிங்குசாமிக்கு ‘எனர்ஜி’ கொடுத்த சதுரங்க வேட்டை!

செய்திகள் 14-Jul-2014 5:47 PM IST Chandru கருத்துக்கள்

வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் ரிசல்ட்டை ரொம்பவே நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் அதன் தயாரிப்பாளர் மனோபாலா. படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார்கள் ‘சதுரங்க வேட்டை’ டீம். இப்படத்தை வாங்கி வெளியிடும் ‘திருப்பதி பிரதர்ஸ்’ லிங்குசாமி பேசும்போது, ‘‘இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி மனோபாலா சார் எனக்கு டெய்லி கால் பண்ணுவார். ஆனா, நான் மும்பையில ‘அஞ்சான்’ படத்தோட ஷூட்டிங்கில் பிஸியா இருந்ததால என்னால அப்போ பார்க்க முடியலை. கடைசியா ஒரு நாள் ‘சதுரங்க வேட்டை’ படத்தைப் பார்க்கிறதுக்கான நேரம் வந்துச்சு. ஆனா, அது நைட் 8 மணி... அதோட நான் ரொம்பவும் டயர்டா இருந்தேன். இருந்தாலும் படம் ஆரம்பிச்ச 10 நிமிஷத்துல மறுபடியும் என் உடம்புக்குள்ள ஒரு எனர்ஜி வந்தது மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு டயலாக்கும் சூப்பரா இருந்துச்சு, எடிட்டிங்கும் ரொம்ப ஸ்பெஷலா, புதுசா இருந்துச்சு. இதுவரைக்கும் இந்தப் படத்தை நான் நாலு தடவை பார்த்துட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எனக்கு புதுசா பார்க்கிற மாதிரிதான் இருந்துச்சு’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;