விக்ரம் பிரபுவை இயக்கும் விஜய்!

விக்ரம் பிரபுவை இயக்கும் விஜய்!

செய்திகள் 14-Jul-2014 3:36 PM IST VRC கருத்துக்கள்

அமர்க்களமாக தனது திருமணத்தை முடித்த கையோடு, தான் இயக்கிய ‘சைவம்’ படத்தையும் வெற்றிகரமாக ரிலீஸ் செய்துவிட்ட இயக்குனர் விஜய், இப்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாகிவிட்டார். இந்தப் படத்தை ‘சென்னையில் ஒரு நாள்’, ‘புலிவால்’ ஆகிய படங்களை இணைந்து தயாரித்த ராதிகா சரத்குமாரும், லிஸ்டின் ஸ்டீஃபனும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கதாநாயகி வேட்டை நடந்து வருகிறது. ஒளிப்பதிவுக்கு நீரவ்ஷா, பாடல்களுக்கு நா.முத்துக்குமார், இசைக்கு ஜி.வி.பிரகாஷ், படத்தொகுப்புக்கு ஆன்டனி என இயக்குனர் விஜய்யின் ஆஸ்தான டெக்னீஷியன்கள் இப்படத்திலும் அவருடன் கை கோர்க்கின்றனர். மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ஷட்டர்’ என்ற படத்தை ரீ-மேக் செய்யும் திட்டம் விஜய்யிடம் இருந்து வருகிறது. இந்தப் படத்தை தான் விஜய் தமிழில் விக்ரம் பிரபுவை வைத்து இயக்கப் போகிறார் என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;