15 கோடியில் உருவாகும் 2 படப்பிடிப்பு தளங்கள்!

15 கோடியில் உருவாகும் 2 படப்பிடிப்பு தளங்கள்!

செய்திகள் 14-Jul-2014 3:01 PM IST VRC கருத்துக்கள்

இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சினிமாவிலிருந்து வந்தவர் என்பதால், அவர் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டு, சினிமாவை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சினிமாவை நம்பி இருப்பவர்களின் நலனுக்காகவும் பல புதிய திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்தியும் வருகிறார். அதன் அடிப்படையில் இப்போது, சென்னை எம்.ஜி.ஆர்.திரைப்பட பயிற்சி வளாகத்தில் 15 கோடி ரூபாய் செலவில், இரண்டரை ஏக்கர் நிலபரப்பில் இரண்டு குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும் என்று இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.

மாறி வரும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளாலும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் படப்பிடிப்புத் தளங்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது என்றும், அதனால் புதிய படப்பிடிப்புத் தளங்களை அமைத்து தர வேண்டும் என்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா உலகினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;