பூஜையுடன் துவங்கியது ‘தாரை தப்பட்டை’

பூஜையுடன் துவங்கியது ‘தாரை தப்பட்டை’

செய்திகள் 14-Jul-2014 2:37 PM IST VRC கருத்துக்கள்

'பரதேசி’ படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கும் படம் ‘தாரை தப்பட்டை’. கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் சசிகுமர், வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். இப்படத்திற்காக இளையராஜா ஏற்கெனவே 12 பாடல்களை பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் பாலா, சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோருடன் இயக்குனர் மிஷ்கின், நடிகர்கள் அதர்வா, ஜி.எம்.குமார் உட்பட பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பாலா இயக்கும் படம் என்றால் பெரும்பாலும் அதில் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்துவார். அந்த வகையில் இப்படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக ‘ஸ்டுடியோ 9’ நிறுவன தயாரிப்பாளர் சுரேஷ் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பாலா இயக்கும் படம் என்றால் அதில் வில்லனுக்கும் உரிய முக்கியத்துவம் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;