வருங்கால கணவரை தேடிச் செல்லும் ஷெரின்!

வருங்கால கணவரை தேடிச் செல்லும்  ஷெரின்!

செய்திகள் 14-Jul-2014 1:01 PM IST VRC கருத்துக்கள்

'மிராக்கிள் மூவி மேக்கர்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் பட ‘திகில்’. இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடிக்கிறார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு ஷெரின் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை எழுதி இயக்கி வருபவர் சந்தோஷ் கொடன்கேரி. இவர் படம் பற்றி கூறும்போது, ‘‘ இது ஒரு இரவில் நடக்கும் கதையைகொண்ட திகில் படம். சென்னையில் இருக்கும் ஷெரீன் தனது வருங்கால கணவரை சந்திக்க கூர்க் என்ற இடத்திற்கு வந்து ஒரு மாளிகையில் தங்குகிறார்.மலை பிரதேசம் என்பதால் இரவு பயணத்தை தவிற்பதற்காகத்தான் கூர்கில் தங்குகிறார். அந்த இரவில் அவர் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் படத்தின் கதை. விடிந்து அவர் தனது வருங்கால கணவரை சந்திக்க மைசூர் சென்றாரா இல்லையா என்பதை திரைக்கதை திகிலுடன் சொல்லும். சமீபகாலமாக நிறைய த்ரில்லர் படங்கள் ரிலீசாகிறாது. அந்த வரிசையில் இப்படமும் ரசிகர்கள் விரும்பும் படமாக அமையும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;