கலைஞர் வசனத்தில் ஒரு படம்!

கலைஞர் வசனத்தில் ஒரு படம்!

செய்திகள் 14-Jul-2014 12:11 PM IST Top 10 கருத்துக்கள்

கலைஞர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, சிவாஜி நடித்த ‘மனோகரா’ படத்தில் இடம் பெற்ற, புகழ்பெற்ற வசனம் ‘பொங்கி எழு மனோகரா’. இந்த பிரபலமான வசனத்தின் பெயரில் இப்போது சத்தமில்லாமல் ஒரு படம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் ‘பட்டாளம்’, ‘சுண்டாட்டம்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவரும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சக்தி கேரக்டரில் நடித்து வருபவருமான இர்ஃபான் கதையின் முக்கிய கேரக்டர் ஒன்றில நடிக்கிறார். ‘பேனியன் மூவிஸ்’ நிறுவம் சார்பில் எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கும் இப்படத்தை ரமேஷ் ரங்கசாமி எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை சி.ஜெ.ராஜ்குமார் ஏற்றிருக்க, கண்ணன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆயா வட சுட்ட கதை - டிரைலர்


;