இரட்டை சந்தோஷத்தில் எஸ்.ஆர்.பிரபாகரன்!

இரட்டை சந்தோஷத்தில் எஸ்.ஆர்.பிரபாகரன்!

செய்திகள் 14-Jul-2014 11:40 AM IST VRC கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர், இயக்குனர் - நடிகர் சசிகுமாரின் சிஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே நாளில் தான் எஸ்.ஆர்.பிரபாகர், திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். எஸ்.ஆர்.பிரபாகரன் – திவ்யா தம்பதியருக்கு இன்று முதல் திருமண நாள்! இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் எஸ்.ஆர்.பிரபாகரன் பிறந்த நாளும் இன்று தான்! இன்று, முதல் திருமண நாள் மற்றும் பிறந்த நாளை இரட்டை சந்தோஷத்துடன் கொண்டாடும் இந்த தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய வாழ்த்துக்கள்! ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தொடர்ந்து மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் எஸ்.ஆர்.பிரபாகரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;