ரசிகர்களின் கரகோஷத்தால் வாயடைத்த தனுஷ்!

ரசிகர்களின் கரகோஷத்தால் வாயடைத்த தனுஷ்!

செய்திகள் 14-Jul-2014 11:24 AM IST VRC கருத்துக்கள்

சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த கிரிட்டிக் விருது ‘மரியான்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தனுஷுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு தடித்த ஃபேரேமுடனான மூக்கு கண்ணாடி, கோட் - சூட் சகிதம் (கிட்டத்தட்ட ‘வேலியில்லா பட்டதாரி’ பட கெட்-அப்பில்) தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் வந்திருந்தார் தனுஷ். விழா மேடைக்கு வந்த தனுஷ், மலையாளத்தின் சிறந்த கிரிட்டிக் விருதுக்கு தேர்வான ப்ருத்திவிராஜுக்கு (படம்: செல்லுலாய்டு) விருது வழங்கினார். அதன் பிறகு தனுஷ் பேச மைக்கைப் பிடித்ததும் அரங்கமே ரசிகர்களின் கைத்தட்டல்களால் அதிர்ந்தது! இதை தொடர்ந்து ஒரு சில வினாடிகள் மௌனமான தனுஷ், ‘‘நான் ஒரு லுங்கி, டி ஷர்ட் போட்டுக்கொண்டு ‘ஒத்த சொல்லால…’ அப்படின்னு பாடிகிட்டு ரோட்டுல திரியிற மாதிரியான ஒரு மனுஷனாக தான் இருந்தேன். ஆனா நீங்கல்லாம் சேர்ந்து என்னை கோட்- சூட் எல்லாம் போட வைத்து, இந்த மேடைக்கு அழைத்து வந்து, எனக்கு விருதெல்லாம் கொடுத்து கௌரவப்படுத்துறீஙக’’ன்னு சொன்னதும் அரங்கத்தில் மீண்டும் பலத்த கைத்தட்டல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;