29 விருதுகள் வாங்கி குவித்த ஏ.ஆர்.ஆர்.

29 விருதுகள் வாங்கி குவித்த ஏ.ஆர்.ஆர்.

செய்திகள் 14-Jul-2014 10:50 AM IST VRC கருத்துக்கள்

சென்னையில் நடந்த தென்னிந்திய மொழிப் படங்களுக்கான ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் தமிழின் சிறந்த இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் விருது பெற்றார். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ மற்றும் தனுஷ் நடித்த ‘மரியான்’ படங்களுக்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக இந்த விருது அவருகு வழங்கப்பட்டது. சிறந்த இசை அமைப்பாளர் யார் என்ற நாமினேஷனில் ஏ.ஆர்.ராஹ்மான், அனிருத் உட்பட பல பேர் இருக்க, நடிகை குஷ்பு சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று அறிவித்ததும் விழா மேடைக்கு வந்த இசைப்புயலிடம், ‘இது உங்களுக்குக் கிடைக்கும் எத்தனையாவது ஃபிலிம் ஃபேர் விருது?’ என்று கேட்டதும், ஏ.ஆர்.ரஹ்மான் புன்னகைத்தவாறு ‘இது எனக்குக் கிடைக்கும் 29-ஆவது விருது’ என்றார்’. அப்போது அந்த அரங்கம் அதிர மொத்த பார்வையார்களும் கரகோஷம் எழுப்பி, இசைப்புயலை நெகிழ வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;