எதிர்பார்ப்பு அதிகமாகும் ‘சதுரங்க வேட்டை’

எதிர்பார்ப்பு அதிகமாகும் ‘சதுரங்க வேட்டை’

செய்திகள் 14-Jul-2014 10:40 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு சில படங்கள் டீஸரின் மூலமே ரசிகர்களிடம் கவனம் பெற்றுவிடும். அந்த வரிசையில் வரும் 18ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் படம்தான் ‘சதுரங்க வேட்டை’. மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 45 வினாடிகள் கொண்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் இடம்பெற்ற ‘‘உனக்கு மட்டும் புரிஞ்சதுனா நான் வேற ஐடியா யோசிக்கணும்’’ என ஹீரோ நட்டி சீரியஸாக பேசும் வசனம் ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்தது. இந்த டீஸர் ஒன்றே இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது. அதோடு மனோபாலா தயாரித்திருப்பதும், இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து அதை ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட இருப்பதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக உயர்த்தியிருக்கிறது. வரும் ஜூலை 18ஆம் தேதி தனுஷின் 25வது படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படமும் ரிலீஸாகிறது. இதனால் ‘சதுரங்க வேட்டை’யின் மீதான கவனம் ரசிகர்களிடம் இன்னும் அதிகரித்திருக்கிறது.

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டிரைலர்


;