ராஜாவுக்கு நன்றி சொன்ன ராணி!

ராஜாவுக்கு நன்றி சொன்ன ராணி!

செய்திகள் 14-Jul-2014 10:38 AM IST VRC கருத்துக்கள்

நயன்தாராவுக்கு தொடர்ச்சியாக பல விருதுகள் கிடைத்து கொண்டிருக்கிறது. ஒரு வாரம் முன்னால் சென்னையில் நடந்த விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் ‘ராஜா ராணி’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தொடர்ந்து சென்னையில் நேற்று முன்தினம் நடந்த 61-ஆவது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் ‘ராஜா ராணி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது மீண்டும் நயன்தாராவுக்கு கிடைத்தது. இந்த விருதை ‘ராஜா ராணி’ படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யா முன்னிலையில் பெற்றுக்கொண்டு நயன்தாரா பேசும்போது, ’‘தாங்க்ஸ் ராஜா’’ என்று மறைமுகமாக ஆர்யாவுக்கு நன்றி சொல்ல, ஆர்யாவும் அதற்கு பதிலாக நயன்தாராவை சைகையால் கலாய்ததவாறு தங்களுக்குள் இருக்கும் ஆழமான நட்பை வெளிப்படுத்தினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;