ஃபிலிம்பேரில் ஜெயித்தவர்கள் யார் யார்?

ஃபிலிம்பேரில் ஜெயித்தவர்கள் யார் யார்?

கட்டுரை 14-Jul-2014 10:23 AM IST Chandru கருத்துக்கள்

‘ஃபிலிம்பேர்’ பத்திரிகையின் 61-வது தென்னக திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், மகேஷ் பாபு, தனுஷ், அதர்வா, நடிகைகள் ரேகா, சமந்தா, நயன்தாரா, , பூஜாகுமார், தன்ஷிகா, லட்சுமிராய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர்கள் பாலா, ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உட்பட பல்வேறு தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களிலிருந்து சிறந்த படைப்புகளுக்காகவும், படைப்பாளர்களுக்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழுக்கான விருதுப் பட்டியல் :

சிறந்த திரைப்படம் - தங்க மீன்கள்
சிறந்த இயக்குனர் - பாலா [பரதேசி]
சிறந்த நடிகர் - அதர்வா [பரதேசி]
சிறந்த நடிகர் (நடுவர்கள் தேர்வு) - தனுஷ் [மரியான்]
சிறந்த நடிகை - நயன்தாரா [ராஜா ராணி]
சிறந்த துணை நடிகர் - சத்யராஜ் [ராஜா ராணி]
சிறந்த துணை நடிகை - தன்சிகா [பரதேசி]
சிறந்த புதுமுக நடிகை - நஸ்ரியா [நேரம்]
சிறந்த புதுமுக நடிகர் - நிவின் பாலி [நேரம்]
சிறந்த ஒளிப்பதிவு - ராஜீவ் மேனன் [கடல்]
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் [கடல்]
சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் பாடல் : ஆனந்த யாழை [தங்க மீன்கள்]
சிறந்த பாடகி - சக்திஸ்ரீ கோபாலன். ‘நெஞ்சுக்குள்ளே’ [கடல்]
சிறந்த பாடகர் - ஸ்ரீராம் பார்த்தசாரதி. ‘ஆனந்த யாழை’ [தங்க மீன்கள்]
வாழ்நாள் சாதனையாளர் விருது - பாலு மகேந்திரா

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;