அஜித் வழியில் சிம்பு செய்த அதிரடி!

அஜித் வழியில் சிம்பு செய்த அதிரடி!

செய்திகள் 12-Jul-2014 3:33 PM IST VRC கருத்துக்கள்

‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் நடித்து வந்தவர் அஜித். நாளடைவில் இதுபோன்ற பட்டங்களையும், விருதுகளையும் தவிர்த்தார் அஜித்! சரண் இயக்கிய ‘அசல்’ படத்திலிருந்து ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தைத் துறந்த அஜித், இப்படத்தின் டைட்டில் கார்டில் அஜித் என்று மட்டுமே போட்டிருந்தார். அஜித் வழியில் இப்போது நடிகர் சிம்புவும் தனது ‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை துறந்திருக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்களின் டைட்டில் கார்டில் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு என்று போட்டு வந்தவர், அடுத்து ரிலீசாகவிருக்கும் தனது ‘வாலு’ படத்தில் ‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைத் தவிர்த்து வெறும் சிம்பு என்றே போட சொல்லியிருக்கிறார். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;