‘அஞ்சான்’ டீஸர் ரெக்கார்டு பிரேக்!

‘அஞ்சான்’ டீஸர் ரெக்கார்டு பிரேக்!

செய்திகள் 12-Jul-2014 2:49 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகம் பிடித்துள்ளது. சென்ற 5-ஆம் இரவு 10 மணிக்கு வெளியான இப்படத்தின் டீஸர் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை எட்டியுள்ளது. அதாவது, தற்போதைய நிலவரப்படி ‘அஞ்சான்’ டீஸரை 20,40,000 (இருபது லட்சத்து நாற்பதாயிரம்) பேர் பார்த்துள்ளனர். சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘கத்தி’ டீஸர், ஒரு மாதம் முன்னாடி வெளியான தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ டீஸர்களை பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட ‘அஞ்சான்’ பட டீஸரை பார்த்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ‘அஞ்சான்’ படைத்துள்ள இந்த சாதனை சூர்யா ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும், மேலும் அதிகரிக்கும் வகையில், நாளுக்கு நாள் இன்னமும் நிறைய பேர் ‘அஞ்சான்’ டீஸரை பார்த்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;