திருட்டு விசிடிக்கு எதிராக விஷால்!

திருட்டு விசிடிக்கு எதிராக விஷால்!

செய்திகள் 12-Jul-2014 11:20 AM IST VRC கருத்துக்கள்

காரைக்குடியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்காக காரைக்குடியில் தங்கியிருக்கும் விஷால், நேற்று அங்குள்ள இரண்டு கேபிள் டிவிக்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமையலறையில்’ படங்கள் ஒளிபரப்பாவதை கண்டுள்ளார். சட்டப்படி அனுமதி பெறாமல் இப்படி படங்கள் ஒளிபரப்பாவதை கண்ட விஷால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்த்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தான் சம்பந்தப்பட்ட படங்கள் இல்லையென்றாலும் திருட்டு விசிடிக்கு எதிராக விஷால் எடுத்துக் கொண்ட இந்த முயற்சி பாராட்டத்தக்கதே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;