நள்ளிரவு 12 மணிக்கு ‘ஆ’ பாடல்கள்!

நள்ளிரவு 12 மணிக்கு ‘ஆ’ பாடல்கள்!

செய்திகள் 11-Jul-2014 4:01 PM IST Top 10 கருத்துக்கள்

‘அம்புலி 3டி’ பட டீமின் அடுத்த படைப்பு ‘ஆ’. த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் புதுமையாக வெளியிடுகின்றனர். த்ரில்லர் படம் என்றாலே அதில் இரவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் இப்படத்தின் பாடல்களை இன்று (11-7-14) நள்ளிரவு 12 மணிக்கு சூரியன் எஃப்.எம்.மில் வெளியிடுகிறார்கள். இந்த புதுமையான யுக்திக்கு ஆதரவு கொடுத்த படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி என்கின்றனர் இப்படத்தை இயக்கியிருக்கும் இரட்டை இயக்குனர்களான ஹரியும் – ஹரீஷ்ம்! அவர்கள் மேலும் இது பற்றி குறிப்பிடும்போது, ‘‘இந்த நள்ளிரவு பாடல் வெளியீடு உலகத்திலேயே இது தான் முதல் முறை என்று நம்புகிறேன்’’ என்றும் கூறியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆ - டிரைலர்


;