விஷாலின் ‘அடி’ சென்டிமென்ட்!

விஷாலின் ‘அடி’ சென்டிமென்ட்!

செய்திகள் 11-Jul-2014 2:49 PM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு இப்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. அங்கு விஷால், வில்லன் முகேஷ் திவாரியுடன் மோதும் படு ஆக்ரோஷமான சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார் ஹரி. ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மேற்பார்வையில் எடுக்கப்பட்டு வரும் இந்த சண்டை காட்சியில் விஷால் மிக உயரத்திலிருந்து குதித்தவாறு முகேஷ் திவாரியை தாக்குவது மாதிரி காட்சி! அந்த காட்சியை படமாக்கும்போது கிழே குத்தித்த விஷால் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாராம். இதனால் அவர் முகத்தில் லேசாக அடிப்பட்டதாம். இருந்தாலும் அடிப்பட்டதையும், அதன் வலியையும் பொருட்படுத்தாமல் விஷால் தொடர்ந்து அந்த காட்சியில் நடித்தாராம். ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோதும் விஷாலுக்கு கையில் அடிப்பட்டது.

படப்பிடிப்பின்போது இப்படி அடிப்படுவது குறித்து விஷால் கூறும்போது, ‘‘நான் நடித்த ‘மலைக்கோட்டை’ மற்றும் ‘சண்டைக்கோழி’ படங்களின் படப்பிடிப்பின்போதும் எனக்கு இதுமாதிரி அடிப்பட்டது. சென்டிமென்டாக அந்தப் படங்கள் வெற்றியும் பெற்றது. அது மாதிரி அடிப்பட்டுக் கொண்டு நடிக்கிற இந்தப் படமும் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். காரைக்குடியை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்து கேரளாவில் நடக்கவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;