ரம்ஜானுக்கு திருமணம் எனும் நிக்காஹ்!

ரம்ஜான் நாளில் திருமணம் எனும் நிக்காஹ்!

செய்திகள் 11-Jul-2014 12:09 PM IST VRC கருத்துக்கள்

நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து வந்த படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. தமிழில் நஸ்ரியா நசீம் முதன் முதலாக நடிக்க ஒப்புக்கொண்ட படம் கூட இது தானாம்! ஜெய், நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. இப்போது, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை வருகிற ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் அனீஸ் இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;