லண்டனில் ‘கத்தி’ ஆடியோ வெளியீட்டு விழா?

லண்டனில் ‘கத்தி’ ஆடியோ வெளியீட்டு விழா?

செய்திகள் 11-Jul-2014 11:22 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை லண்டனில் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழா லண்டனில் வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி நடக்கவிருப்பதாகவும், இதற்காக மொத்த ‘கத்தி’ யூனிட்டும் லண்டன் பறக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விழாவில் ‘கத்தி’ படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு விழா மேடையில் கலைஞர்கள் நடனம் ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;