ஜல்லிக்கட்டை மையப்படுத்தும் இளமி!

ஜல்லிக்கட்டை மையப்படுத்தும்  இளமி!

செய்திகள் 10-Jul-2014 4:28 PM IST VRC கருத்துக்கள்

'ஜோ புரொடக்ஷன்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘இளமி’. இந்த படத்தில் ‘சாட்டை’ படத்தில் கதாநாயகனாக நடித்த யுவன் நடிக்கிறார். கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரிக்கிறார் ஜே.ஜூலியன் பிரகாஷ். இவர் இயக்குனர் ரவிமரியாவின் உதவியாளர். படம் பற்றி அவர் கூறும்பொது,

‘‘பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் மாதிரியான கதைக்களம். அந்த காலத்தில் ஜல்லிகட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதைத் தான் இதில் கருவாக எடுத்திருக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மதுரை, தேனி, போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டம் என்பதால் அதற்கான லொகேஷன் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டிருகிறது. இந்தப் படத்திற்கு யுகா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொங்கு நாட்டு கால்நடை திருவிழா 2017


;