‘அஞ்சான்’ ஆடியோ விழாவில் கமல் – ஷங்கர்?

‘அஞ்சான்’ ஆடியோ விழாவில் கமல் – ஷங்கர்?

செய்திகள் 10-Jul-2014 4:12 PM IST Top 10 கருத்துக்கள்

கோலிவுட்டின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிற படம் சூர்யாவின் ’அஞ்சான்’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களும் வருகிற 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஜூலை 23, சூர்யாவின் பிறந்த நாள்! சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ஒரு நாள் முன்னதாகவே ஏராளமான அவரது ரசிகர்கள் முன்னிலையில் ‘அஞ்சான்’ பட பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட இருக்கிறார். இந்த விழாவில் பிரம்மாண்ட பட இயக்குனர் ஷங்கரும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிங்குசாமி இயக்கியுள்ள ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும், அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார் என்பதும் இந்தப் படத்தை லிங்கு சாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;