அஜித் படத்தில் சல்மான் கான்!

அஜித் படத்தில் சல்மான் கான்!

செய்திகள் 10-Jul-2014 2:38 PM IST VRC கருத்துக்கள்

அஜித் நடித்து தமிழில் ஹிட்டான ‘வீரம்’ ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. ஹிந்தி ரீ-மேக்கையும் ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவாவே இயக்குகிறார். ஐந்து அண்ணன் - தம்பிகள் பற்றிய இக்கதையில் தமிழில் அஜித் நடித்த கேர்கடரில் சல்மான் கான் நடிக்கிறார். அத்துடன், இவருடன் தம்பிகளாக சல்மானின் நிஜ தம்பிகளான ஆர்ஃபான் கான், சோஹில் கான் இருவரும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே சல்மான் கான் சில தென்னிந்திய மொழிப் படங்களின் ரீ-மேக்கில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சிறுத்தை’ சிவா முதன் முதலாக ஹிந்தியில் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தான் துவங்குவாராம். இதற்கு காரணம், ‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அதாவது இந்த ஆண்டு இறுதியில் அஜித் – சிவா மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம். இந்தப் படத்தை முடித்து தான் சிவா ஹிந்திக்கு செல்லவிருக்கிறாராம். சிவா இப்போது அஜித் பட ஸ்கிரிப்ட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;