'திருடன் போலீஸ்' வெற்றிப்படம்! - வெற்றிமாறன்

'திருடன் போலீஸ்'  வெற்றிப்படம்! -  வெற்றிமாறன்

செய்திகள் 10-Jul-2014 1:56 PM IST Inian கருத்துக்கள்

தரமான படங்களை தயாரித்து வரும் எஸ்.பி.பி.சரணின் 'கேபிடல் ஃபிலிம் ஒர்க்ஸ்', மற்றும் 'கெனன்யா ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரித்துள்ள படம் ‘திருடன் போலீஸ்’. இப்படத்தில் ‘அட்டகத்தி' தினேஷ் நான்கு விதமான தோற்றங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘திருடன் போலீஸ்’ படத்தின் இசை வெளியீடு இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடை பெற்றது. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ஆடியோவை வெளியிட, இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுக்கொண்டார். படத்தின் ட்ரைலரை இயக்குனர் ரஞ்சித், இயக்குனர் எம்.ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஆவடி போலீஸ் எஸ்.பி., ஈஸ்வரன், தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, எடிட்டர் பிரவீன், வையாபுரி, நடிகைகள் நந்திதா, காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

இவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, '‘இந்தப் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இயக்குனர் கார்த்திக் ராஜு என்னிடம் கதைப் பற்றி சொன்னார். நல்லாயிருந்தது. ட்ரைலரையும், பாடல்களையும் பார்க்கும்போது நல்லாயிருக்கு. இது என்டர்டெயின்மென்ட் படமா இருக்கும். தினேஷ் ஒவ்வொரு படத்திலேயும் நல்லா நடிச்சுகிட்டு வர்றார். படத்துக்கு படம் அவரோட நடிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கு. டான்ஸ் கொஞ்சம் நல்லா பண்ணனும். சாங்ஸ், ட்ரைலரை பார்க்கும்போது மொத்த டீமோட உழைப்பு தெரிகிறது. இப்படம் நிச்சயமா வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;