குத்துப் பாடல் - காஜல் மறுப்பு!

குத்துப் பாடல் - காஜல் மறுப்பு!

செய்திகள் 10-Jul-2014 12:23 PM IST VRC கருத்துக்கள்

அஞ்சலி நடிக்கும் தெலுங்கு படம் ‘கீதாஞ்சலி’. ராஜ்கிரண் இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என்ற செய்தி சமீபத்தில் சில இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் ஹாட் டாபிக் ஆக இடம் பெற்றிருந்தது. அந்த செய்திகளில் முதலில் இந்த குத்துப் பாடலுக்கு ஆட அழைக்கப்பட்டவர் தமன்னா என்றும், ஆனால் தமன்னா அதில் ஆட மறுக்கவே, அந்த வாய்ப்பு இப்போது காஜல் அகர்வாலுக்கு கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இந்தச் செய்திகளில் சிறிதும் உண்மையில்லையாம். அதை நடிகை காஜல் அகர்வாலே தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். அதில் ‘’ஒரு பாடலுக்கு ஆட என்னை யார் அழைக்கவும் இல்லை, நான் ஒப்புக்கொள்ளவும் இல்லை. நீங்கள் படிக்கிற செய்திகளை எல்லாம் நம்பாதீர்கள். நான் இப்போது ’கோவிந்துடு அன்டாரிவடேலெ’ படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்


;