நட்புக்காக இறங்கி குத்தும் விஜய் சேதுபதி!

நட்புக்காக இறங்கி குத்தும் விஜய் சேதுபதி!

செய்திகள் 10-Jul-2014 11:18 AM IST Inian கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘திருடன் போலீஸ்’ கார்த்திக் ராஜு இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி "வந்தாடு கொண்டாடு" என்ற பாடலுக்கு சூப்பர் குத்து டான்ஸ் ஆடியிருக்கிறார். ‘அட்டகத்தி’ தினேஷ், விஜய் சேதுபதி சினிமாவுக்கு வருவதற்கு முன்னையே நண்பரகள், ஒரே அறையில் தங்கி இருந்தவர்கள். அந்த நட்புக்காகவே விஜய்சேதுபதி இப்படத்தில் குத்துப் பாடலுக்கு ஆடியிருக்கிறாராம். அத்துடன் விஜய் சேதுபதியுடன் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா தான் ‘திருடன் போலீஸ்’ படத்தில் தினேஷுக்கு ஜோடி! யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;