ஆர்யாவின் 20 வருட நண்பர்!

ஆர்யாவின் 20 வருட நண்பர்!

செய்திகள் 10-Jul-2014 11:51 AM IST Inian கருத்துக்கள்

'கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ்' சார்பாக வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள படம் ‘நம்பியார்’. விக்ரமன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேசா ‘நம்பியார்’ படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு சென்னை தேவி தியேட்டரில் நடந்தது. சரத்குமார் முன்னிலையில் சூர்யா இசைத் தட்டை வெளியிட்டார். இவ்விழாவில் ‘லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ்’ முரளிதரன், ஆர்.கண்ணன், பார்த்திபன், ஷாம், ஜீவா, ஆர்யா, பவர் ஸ்டார் சீனிவாசன், நமீதா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தனது வழக்கமான பேச்சின் மூலம் பார்த்திபன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சூர்யா பேசும்போது, ‘‘ஸ்ரீகாந்தின் ஒரு பேட்டி எனக்கு நல்ல ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறது. ‘ரோஜாக்கூட்டம்’ பட சமயத்தில் அவர், அப்பா அவரிடம் கூறியதை பேட்டியில் தெரிவித்திருந்தார். அது என்னவென்றால் ‘நாம் எந்த வேலை செய்தாலும் அதில் முழு மூச்சுடன் ஈடுபட்டு அந்த வேலையில் முதலாவதாக வரவேண்டும்’ என்பது தான். எனக்கு இன்றுவரை அது இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது’.

லிங்குசாமி சார் ‘அஞ்சான்’ படப்பிடிப்பின்போது ஒரு வெற்றிக் கதையை எப்படி தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது பற்றி கூறும்போது ‘கதை கேட்கும்போது ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி பளிச்சென இருக்கும் அது போல 5 – 6 காட்சிகள் இருந்தால் அது வெற்றிபெறும் கதையாக இருக்கும்’ என்றார். அதே போல ஸ்ரீகாந்த் ‘நம்பியார்’ படத்தின் காட்சிகளை என்னிடம் கூறினார். நன்றாக இருந்தது. எனவே இப்படம் வெற்றி பெறும்’’ என்றார்.

தொடர்ந்து ஸ்ரீகாந்த் பேசும்போது, ‘‘இன்று வளர்ந்து வரும் எல்லா நடிகர்களுக்கும் சூர்யா சார் தான் இன்ஸ்பிரேஷன். எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர். ஆர்யாவுக்கும் எனக்கும் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே (20 வருடங்களாக) பழக்கம் உண்டு. இந்த படத்தில் ஒரு சின்ன ரோல் பண்ண அவரிடம் அணுகியபோது ‘மச்சான் எப்ப வரணும்னு சொல்லு, வர்றேன்’ என்றார். வந்து நடித்தும் கொடுத்தார். என்று நெகிழ்ந்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;