குறும்பட இயக்குனரின் ‘வெத்து வேட்டு’

குறும்பட இயக்குனரின் ‘வெத்து வேட்டு’

செய்திகள் 10-Jul-2014 10:25 AM IST Top 10 கருத்துக்கள்

'விபின் மூவி' பட நிறுவனம் சார்பாக எஸ்.குமார், ஏ.ராமசாமி, டி.சரவணமாணிக்கம், ஆர்.மூர்த்தி, ஏ.லட்சுமணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘வெத்து வேட்டு’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘மாத்தியோசி’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘விழா’ பட நாயகி மாளவிகா மேனன் நடிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மணிபாரதி. அவர் படம் குறித்து பேசும்போது, ‘‘நான் திருப்பதிசாமி, ராஜா, பாலாஜி.கே.குமார் போன்றவர்களிடம் உதவியாளராக இருந்திருக்கிறேன். ‘கஸ்தூரி’, ‘அத்திப்பூகள்’ போன்ற சின்னத்திரை தொடர்களிலும் பணியாற்றி இருக்கிறேன். அத்துடன் ஏழு குறும்படங்களையும் இயக்கி இருக்கிறேன்.

இப்படிதான் இருக்க வேண்டும் என்பது காதல் அல்ல. எப்படி இருந்தாலும் காதல் காதல் தான் என்கிற சின்ன கருத்தை வைத்து கமர்ஷியலாக இப்படத்தை படமாக்கி இருக்கிறோம். கதாபாத்திரத்திற்கேற்ப ஹரீஷ், மாளவிகாமேனன் இருவரும் கனகச்சிதமாக பொருந்தி போயினர். ஒவ்வொரு கதாப்பாதிரமும் பேசப்படும் படமாக இது இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது’’ என்றார். இப்படத்திற்கு காசி ஒளிப்பதிவு செய்ய, தாஜ்னூர் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிச்சைக்காரன் - டிரைலர்


;