சமுத்திரக்கனி - விமல் படத்தின் டீஸர் நாளை ரிலீஸ்!

சமுத்திரக்கனி - விமல் படத்தின் டீஸர் நாளை ரிலீஸ்!

செய்திகள் 10-Jul-2014 10:21 AM IST Chandru கருத்துக்கள்

எஸ்.ஜி. ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் வி.ஆர்.நாகேந்திரன் இயக்கி வரும் படம் ‘நீயெல்லாம் நல்லா வருவடா...’. சீமான் மற்றும் சுசி கணேசனிடம் கோ-டைரக்டராக பணிபுரிந்தவர் நாகேந்திரன். இப்படத்தில் விமலும், சமுத்திரக்கனியும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் சிங்கமுத்து, ‘இமான்’ அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின் ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவை எம்.கே.ஏகாம்பரமும், இசையை ஜி.வி.பிரகாஷ் குமாரும், எடிட்டிங்கை பிரவீன் கே.எல், ஸ்ரீகாந்த் ஆகியோரும் கவனிக்கிறார்கள். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ‘நீயெல்லாம் நல்லா வருவடா...’ படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது. ‘மஞ்சப்பை’ படத்திற்குப் பிறகு விமல் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கிறது இப்படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;