மாதவன் படத்தில் தனுஷ்!

மாதவன் படத்தில் தனுஷ்!

செய்திகள் 10-Jul-2014 9:43 AM IST Top 10 கருத்துக்கள்

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் நடித்த மாதவனும், கங்கனா ரனாவத்தும் இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் தான் தனுஷை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய ‘ரான்ஜ்னா’ படத்தின் இயக்குனரும். இதனால், ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்தில், மாதவனுடன் இணைந்து கௌரவ வேடம் ஒன்றில் தனுஷும் நடிக்கிறார் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பரில் லக்னோவில் இருந்து ஆரம்பமாகின்றன. இப்படத்தைத் தொடர்ந்து ஆனந்த் எல்.ராயும், தனுஷும் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் இணையவிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டீசர்


;