கோச்சடையான்’ வழியில் ‘அஞ்சான்’

கோச்சடையான்’ வழியில் ‘அஞ்சான்’

செய்திகள் 9-Jul-2014 5:25 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா நடித்திருக்கும் ‘அஞ்சான்’ படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ஒரு சில நாட்களிலேயே ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று 10 லட்சத்தை தாண்டியது. இதனையொட்டி நேற்று சென்னையில் ‘அஞ்சான்’ டீஸர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர் இப்படக் குழுவினர். ’அஞ்சான்’ ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதால் படத்திற்கான விளம்பர வேலைகளையும் துவங்கி விட்டது இப்படத்தை தயாரித்துள்ள லிங்கு சாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும். அந்த வகையில் அஞ்சான் படத்திற்காக ஆன்ட்ராய்டில் அஞ்சான் கேம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த கேம்-ஐ சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் கேம் வந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து இப்போது சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தின் கேம் வெளிவரவிருக்கிறது. இதுவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்கிறார்கள். சூர்யா நடித்த படங்களிலேயே முதன் முதலாக கேம் வெளியாவது ‘அஞ்சான்’ படத்துக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;