‘சிங்கம் 3’ வருமா? - சூர்யா விளக்கம்

‘சிங்கம் 3’ வருமா? - சூர்யா விளக்கம்

செய்திகள் 9-Jul-2014 12:23 PM IST VRC கருத்துக்கள்

‘சிங்கம் 2’ படத்தின் அதிரடி வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிற படம் ’அஞ்சான்’. ஆக்‌ஷன் நடிப்பில் சூர்யாவுக்கு பெரும் புகழைத் தேடி தந்த ‘சிங்கம், மற்றும் ‘சிங்கம் 2’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் வருமா? என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சூர்யாவிடமே இந்த கேள்வியை கேட்கும் சந்தர்பம் ரசிகர்களுக்கு நேற்று சென்னையில் நடந்த ‘அஞ்சான்’ புரொமோஷன் நிகழ்ச்சியில் கிடைத்தது. ரசிகர்கள் கேட்ட இந்த கேள்விக்கு சூர்யா பதில் அளிக்கும்போது, ‘‘ஹரி சார் இயக்கத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். ஆனால், அப்படம் ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியா என்பதை இப்போதைக்கு என்னால் கூற முடியாது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;