‘தாதாசாஹிப் பால்கே’ விருது இயக்குனருக்கு பிறந்த நாள்!

‘தாதாசாஹிப் பால்கே’ விருது இயக்குனருக்கு பிறந்த நாள்!

செய்திகள் 9-Jul-2014 11:51 AM IST VRC கருத்துக்கள்

உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உட்பட தமிழ் சினிமாவில் ஏராளமான கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். என்றென்றும் நினைவில் நிற்பது மாதிரியான ஏராளமான திரைப்படங்களை இயக்கியும், ஏராளமான தரமான படங்களை தயாரித்தும் இந்திய சினிமாவில் புகழ்பெற்று விளங்கி வரும் இந்த ஜாம்பவானுக்கு சென்ற 2011-ஆம் ஆண்டுதான் மத்திய அரசு, சினிமாவின் மிக உயர்ந்த விருதான ‘தாதாசாஹிப் பால்கே’ விருது வழங்கி கௌரவித்தது. இன்னும் சினிமாவில் ஒரு இளைஞரைப் போல சுறுசுறுப்பாக இயங்கி வரும் கே.பாலச்சந்தர் தற்போது தனது சிஷ்யர் கமல்ஹாசனுடன் அவரது ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா கண்ட இந்த மாபெரும் கலைஞனுக்கு இன்று பிறந்த நாள்! அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;