சரத்குமாருக்கு ஜோடி ஓவியாவாம்!

சரத்குமாருக்கு ஜோடி  ஓவியாவாம்!

செய்திகள் 9-Jul-2014 10:58 AM IST VRC கருத்துக்கள்

'சென்னையில் ஒரு நாள்', 'புலிவால்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த 'மேஜிக் பிரேம்ஸ்' பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் 'சண்டமாருதம்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். இவர்களுடன் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், ‘காதல்’ தண்டபாணி , ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் ஆகியோரும் நடிக்கிறார்கள். அத்துடன் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் அருண்சாகரும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவதோடு, இன்னொரு முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமாரும் நடிக்கிறார்.

இப்படத்தின் கதையை சரத்குமார் எழுத, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார். என்.எஸ். உதய்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். சரத்குமார் நடிப்பில் ‘மகாபிரபு’, ‘ஏய்’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;