சூப்பர் ஸ்டார் சர்ச்சை! - கே.எஸ்.ரவிகுமார்

சூப்பர் ஸ்டார் சர்ச்சை! - கே.எஸ்.ரவிகுமார்

செய்திகள் 8-Jul-2014 4:35 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வார பாத்திரிகை ஒன்று, கருத்து கணிப்பு நடத்தி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அறிவித்திருந்தது. ஆனால் இந்த கருத்து கணிப்பில் முதல் இடத்தை பிடித்தவர் அஜித் என்றும், அவருக்கு அடுத்த படியாகதான் விஜய்க்கு வாக்குகள் கிடைத்தது என்றும் ஒரு சர்ச்சை கிளம்பி, இணைய தளங்களில் அது சம்பந்தமான தகவல்கள் வெளியாகி சூடு பிடித்தது. இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பெயரில் இயங்கி வந்த ஒரு போலி அக்கவுண்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என்று குறிப்பிட, இதை வைத்து சில இணைய தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தது. இந்த செய்திகளுக்கு இப்போது கே.எஸ்.ரவிக்குமாரே மறுப்பு தெரிவித்துள்ளார். ‘‘இணைய தளங்களில் யாரோ சில விஷமிகள் நான் கூறியதாக சில தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அஜித், விஜய் இருவரில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கூற நான் யார்? ஒரு ரசிகனாக இருந்து அவர்களை ரசிப்பவன் நான். இது சம்பந்தமாக வந்த செய்திகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை’’ என்று தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் தந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;