10 கோடி வசூல், வருகிறது ‘முண்டாசுப்பட்டி-2’

10 கோடி வசூல், வருகிறது ‘முண்டாசுப்பட்டி-2’

செய்திகள் 8-Jul-2014 1:11 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான படம் ‘முண்டாசுப்பட்டி’. ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வெளியாகி இன்றுடன் 25-ஆவது நாள்! இப்படம் தமிழகமெங்கும் இன்னமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், இப்படம் இதுவரை 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் இதனை தயாரித்த ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் தயாராகி நல்ல வசூலை தேடித் தந்துள்ள படங்களின் லிஸ்ட்டில் இப்போது ’முண்டாசுப்பட்டி’யும் சேர்ந்துள்ளதால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆரம்பமாகுமாம். ‘முண்டாசுப்பட்டி’ படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் இயக்க, விஷ்ணு, நந்திதா ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;