கிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் சுவாதி!

கிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் சுவாதி!

செய்திகள் 8-Jul-2014 11:18 AM IST Top 10 கருத்துக்கள்

‘யாமிருக்க பயமே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கும் ‘யட்சன்’ படத்தில் படு சுறு சுறுப்பாக நடித்து வருகிறார் கிருஷ்ணா. இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக ஆர்யாவும் நடிக்க, அவருக்கு ஜோடியாக தீபாசன்னிதி நடிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் முதல் படம் ‘யட்சன்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‘வடகறி’ ஹீரோயின் சுவாதி நடிக்கிறார். இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. ‘ஆரம்பம்’ படத்திற்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் இந்தப் படத்திற்கும் அவரது ஆஸ்தான இசை அமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா தான் இசை அமைப்பாளர். இப்படத்தை ‘யுடிவி’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;