‘சமுத்திரக்கனி இந்தப் படத்திற்கு யானை பலம்’! - தனுஷ்

‘சமுத்திரக்கனி இந்தப் படத்திற்கு யானை பலம்’! - தனுஷ்

செய்திகள் 8-Jul-2014 10:35 AM IST Inian கருத்துக்கள்

தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ சார்பாக தயாரித்து, நடித்துள்ள படம், ‘வேலையில்லா பட்டதாரி’. தனுஷின் 25- ஆவது படமான இப்படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமாகிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ். தனுஷின் ஜோடியாக அமலாபலும், அப்பாவாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர். முதன் முறையாக சமுத்திரக்கனி அப்பாவாக நடித்துள்ளது குறிப்பிடதக்கது.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தனுஷ் பேசியதாவது, ‘‘வேலையில்லா பட்டதாரி’ என்னுடைய 25-ஆவது படம். சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. முன்பெல்லாம் சினிமாவுக்குள் நுழைவது மிகவும் கஷ்டம். ஆனால் நிலைத்து நிற்பது சுலபம். இப்போது சினிமாவுக்குள் நுழைவதும் சுலபம். ஜெயிப்பதும் சுலபம். ஆனால் நிலைத்து நிற்பது மிகவும் கஷ்டம். ‘வேலையில்லா பட்டதாரி’ எனக்கு முக்கியமான படமாகும். சரியான நேரத்தில் சரியான படத்தைக் கொடுத்துள்ளார் வேல்ராஜ். தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வேல்ராஜ் இயக்கிய இந்தப் படம் எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
விவேக் சார் படங்களை தவிர்த்து வந்த சமயம். என்னுடைய 25 -ஆவது படமான இந்தப் படத்தில் அவர் நடிக்கணும்னு மிகவும் ஆசைப்பட்டேன். கடவுள் ஆசிர்வாதத்தில் அவர் நடித்துள்ளார். என் மேல் இருந்த பாசத்திலும் நான் கேட்டதற்காகவும் அவர் நடித்தார். அவருக்கு பெரிய நன்றி. மனோரமா ஆச்சி எப்படி 80-90 களில் எல்லா படங்களிலும் அம்மாவாக நடித்து வந்தாரோ அதேபோல் இப்போது சரண்யா மேடம் நடித்து வருகிறார். ‘அம்மா, அம்மா’ என்ற பாட்டை ஜானகி அம்மா பாட, சரண்யா மேடம் நடித்துள்ளார். இந்தப் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது.

என்னை எப்படி பக்கத்து வீட்டு பையன்னு சொல்றாங்ளோ அதே மாதிரி அமலாபாலை பக்கத்து வீட்டு பெண்ணுன்னு சொல்கிற மாதிரியான தோற்றம் அவருக்கு! அவர் கேரக்டர் மிகவும் கஷ்டமான கேரக்டர். ஆனால் சூப்பராக நடித்துள்ளார். எனக்கு அப்பாவாக நடிக்க சமுத்திரக்கனி சாரிடம் கேட்டேன். அவர் தயங்கினாரோ இல்லையோ, அவருக்கு நெருக்கமானவர்கள் அப்பாவாக நடிப்பதை தவிர்க்கச் சொன்னார்கள். ஆனால் அவர் என் மீது கொண்ட அன்பிலும், பாசத்திலும் நடித்தார். செல்வராகவன் படம் பார்த்துவிட்டு, ‘யார்ற இந்த அப்பா’ என்று கேட்டார். ‘ரொம்ப நல்ல கேரக்டர், நல்லா நடித்துள்ளார் என்றார். சமுத்திரக்கனி சார் இந்தப் படத்திற்கு யானை பலம்! படத்தின் இன்னொரு பலம் இசை அமைப்பாளர் அனிருத். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;