‘ராஜு பாய்’க்கு கிடைத்த சூப்பர் வரவேற்பு!

‘ராஜு பாய்’க்கு கிடைத்த சூப்பர் வரவேற்பு!

செய்திகள் 8-Jul-2014 9:59 AM IST Chandru கருத்துக்கள்

‘‘ராஜு நய்.... ராஜு பாய் போலோ....’’ என ஒவ்வொரு சூர்யா ரசிகர்களும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5ஆம் தேதி இரவு வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸருக்கு இந்த அளவு வரவேற்புக் கிடைக்கும் என லிங்குசாமி டீம்கூட நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வெளியான மூன்று நாட்களில் 1 மில்லியன் (10 லட்சம்) பார்வைகளைக் கடந்து இன்னமும் அதே ஆர்வத்தோடு ரசிகர்களால் பார்க்கப்பட்டும், ‘லைக்’ செய்யப்பட்டும், ‘ஷேர்’ செய்யப்பட்டும் வருகிறது ‘அஞ்சான்’ டீஸர். இன்று காலை வரை ‘அஞ்சான்’ டீஸரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 11,34,480-ஐ தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை வெளிவந்த எந்த சூர்யா படத்தின் டீஸரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கையையும் விட இது மிக அதிகமாகும். அதேபோல் கடந்த மூன்று தினங்களாக ‘யு-டியூப்’பின் ‘இந்தியாவின் தற்போதைய அதிகம் பாப்புலரான வீடியோ’வாகவும் ‘அஞ்சான்’ ஃபர்ஸ்ட் லுக் டீஸரே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;