‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 3’யில் களமிறங்கும் ஜேம்ஸ் பாண்ட்!

‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 3’யில் களமிறங்கும் ஜேம்ஸ் பாண்ட்!

செய்திகள் 7-Jul-2014 4:23 PM IST Chandru கருத்துக்கள்

‘கோல்டன் ஐ’, ‘டுமாரோ நெவர் டைஸ்’, ‘தி வேர்ல்டு இஸ் நாட் எனஃப்’, ‘டை அனதர் டே’ போன்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ‘007’ வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன். இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தவிர்த்து, மற்ற படங்களில் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. இந்நிலையில் அர்னால்ட், சில்வெஸ்டர் ஸ்டாலோன், வான் டேம் உள்ளிட்ட ஹாலிவுட் ஜாம்பவான்கள் பலபேர் களமிறங்கும் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 3’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பியர்ஸ் பிராஸ்னனும் நடிக்க இருக்கிறாராம். இப்படம் வெளிவந்த பிறகு தனக்கு மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என நம்புகிறாராம் அவர். ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளிவந்து வெற்றிபெற்றுள்ள ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’ படத்தின் மூன்றாவது பாகமான இப்படம் வரும் ஆகஸ்டில் உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;