‘திருடன் போலீஸ்’ ஆடியோ எப்போது?

‘திருடன் போலீஸ்’ ஆடியோ எப்போது?

செய்திகள் 7-Jul-2014 2:53 PM IST VRC கருத்துக்கள்

‘உன்னை சரணடைந்தேன்’, ‘ஆரண்யகாண்டம்’ முதற்கொண்ட படங்களை தயாரித்த எஸ்.பி.பி.சரண் தற்போது ஜே.செல்வகுமாருடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘திருடன் போலீஸ்’. ‘ஓட… விரட்ட’ என்று பழக்கப்பட்ட கதையை புதுமையான திரைக்கதை அமைப்பில் சொல்லும் படமாம் ‘திருடன் போலீஸ்’. படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 10-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. ‘அட்டகத்தி’ தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;