அஜித்துக்கு அருண் விஜய் வில்லன்தான்!

அஜித்துக்கு அருண் விஜய் வில்லன்தான்!

செய்திகள் 7-Jul-2014 2:36 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. இப்படத்தில் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு என்ன கேரக்டர் என இத்தனை நாட்களாக சஸ்பென்ஸ் நிலவி வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் விழாவில், ‘ஆரம்பம்’ படத்திற்காக விருது வாங்க மேடையேறிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அந்த சஸ்பென்ஸை உடைத்தார். ‘‘அஜித்துடன் இரண்டு படம் செய்கிறோம். ஏற்கெனவே ஒருமுறை கௌதம் மேனனுடன் நான் படம் செய்வதாக இருந்தது. ஆனால், அது இப்போதுதான் கைகூடியிருக்கிறது. அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை’’ என்று கூறினார் ஏ.எம்.ரத்னம்.

ஆக.... அருண் விஜய், அஜித்துக்கு வில்லன்தான் என்பது உறுதியாகிவிட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;